( SAFRAN BIN SALEEM – அக்குரணை)
பொது பல சேன , சிங்ஹலே ராவய போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான
நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அநுராதபுர ஸியாரத்தில் தொடங்கிய
அவர்கள் பல பள்ளிவாசல்கள் , எமது உரிமைகளில்லெல்லாம் கை வைத்துள்ளார்கள். ஹலால்
விவகாரத்தை பூதாகரமான பிரச்சினையாக மாற்றியது
மட்டுமல்லாது இன்று புர்கா, இஸ்லாமிய வங்கி முறைமை என்று இன்னும் பல
வற்றில் கை வைக்க தொடங்குகிறார்கள்.
ஆனால் எமது சமூகம் ஆரம்பம் முதல் தன்னால் இயன்ற அளவு பொறுமை காத்து வந்தது.
இதனை சாதகமாக பயன்படுத்தி இனவாதிகள் தமது இனவாத செயற்பாடுகளை விஸ்தரித்துக்கொண்டனர்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் எவ்வளவோ விளக்கங்களை கொடுத்தும் இன வாதம் ஓய்வதாக
இல்லை.
குட்டக் குட்ட குனிபவன் மடையன் என்பதற்கினங்க நாடு முழுவதும் முழுமையான
கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை முஸ்லிம் சமூகம்
காட்ட வேண்டும் என INAMULLAH MASIHUDEEN (NALEEMI) அவர்கள் வெளியிட்ட கருத்தை ( http://www.jaffnamuslim.com/2013/02/blog-post_5381.html
) நான் முழுமையாக
ஏற்றுக்கொள்கின்றேன்.
இவ்வாறு நாம் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்டும் போது கவனிக்க வேண்டிய
விடயங்களை ஞாபகப்படுத்தலாம் என நினைக்கின்றேன்.
1.
இஸ்லாமிய வரையரைகளை முழுமையாக பேணல்.
2.
நாம் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்டும்
போது கைகளில் தேசியக் கொடிகளை ஏந்துதல்.
தேசியக் கொடிகளை
அதிகமாக பறக்க விடல்.
3.
நாம் இலங்கையர்கள் ,இது எமது தாய் நாடு என்ற
உணர்வுடன் செயற்படல்.
4.
தென்னிந்தியாவில் விஸ்வரூபம் படத்துக்கெதிராக
அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒன்று சேர்ந்தது போல் எம்மத்தியிலுள்ள அனைத்து
இஸ்லாமிய அமைப்புக்களும் ஒன்று சேர வேண்டும்.
5.
ஆரவாரமின்றி அமைதியாக எமது எதிர்ப்பினை காட்ட
வேண்டும்.
6.
எமது குரல்கள் , சுலோகஙோகள் நாட்டுக்கு எதிராக
அமைந்து விடக் கூடாது.
7.
எமது குரல்கள் , சுலோகஙோகள் பௌத்த மதத்தையோ, ஏனைய மதங்களினையோ தாக்கும்
வகையில் அமைந்து விடக் கூடாது. . (பெரும்பான்மை இன மக்களில்
ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர்.)
எமது நிலமையினை , கருத்துக்களை கச்சிதமாக எத்தி வைக்க
வேண்டும்.
8.
ஊர் தலைமைகள் முழுமையான முறையில் ஒழுங்கு
படுத்தி நெறிப் படுத்த வேண்டும்.
9.
நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன்
தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை முஸ்லிம் சமூகம் காட்ட வேண்டும்
10.
இயன்ற அளவு மாற்று மத சகோதரர்களையும்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
11.
இன்னும்
பல......................................................................................................................
அனைத்து முஸ்லிம்களும் எப்போதும் ஓரணியில்
நின்று எம் முன்னுள்ள சவால்களுக்கு நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன்
தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.