சிந்திப்போம்
செயற்படுவோம்
SAFRAN BIN SALEEM -AKURANA
இனவாத செயற்பாடுகள் இன்று
இலத்திரனியல் ஊடகங்களினூடகவும் முடுக்கி விடப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உதாரணமாக FACE BOOK,
TWITTER இனூடாக இனவாத துவேஷ கருத்துக்களை இனவாதிகள் பரப்பி
வருகிறார்கள். அதற்கு எம்மில் சிலர் பதில் கருத்து (COMMENT)
கொடுக்க முற்படும் போது அவர்கள் பானியிலே கருத்து (COMMENT)
களை முன்வைக்க முற்படுகிறார்கள். இதனால் அங்கு இரு மதங்களும், இனங்களும்
சீண்டப்படுகின்றது.
அவ்வாறு கருத்து தெரிவிப்பின் குறித்த
இனவாத அமைப்புக்கள் குறித்தும், இனவாதிகள் குறித்தும் மட்டுமே கருத்து
வெளியிடவேண்டும். மாறாக கருத்து வெளியிடும் பட்சத்தில் நாமே இன விரிசலுக்கு
காரணமாகி விடுவோம்.
ஆகவே ஆவேசமான முறையில் எமது
எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாது நிதானமான முறையில் சிந்தித்து செயற்படல் வேண்டும்.
FACE
BOOK இல்COMMENT பண்ணும் போது நாகரிகம் பேண
வேண்டும். ஏனைய மதங்களை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்
கொள்ள வேண்டும்.
மேலும் காவிப் பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தை
பாவிப்பதை அனைத்து மட்டத்திலுள்ளவர்களும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
தேரர்ரகளில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என்பதனை மனதில்
நிறுத்த வேண்டும். அதே போல் பௌத்த மதத்தயோ, சிங்கள இனத்தையோ சீண்டி கருத்துக்களை
வெளியிடுவதனை தவிர்ந்து கொள்ளல் வேண்டும். பெரும்பான்மை இன
மக்களில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என்பதனையும் மனதில் நிறுத்த
வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது
மார்க்கத்தை எத்திவைக்கும் விதத்திலும் உண்மை நிலவரத்தை எடுத்துக்காட்டும்
விதத்திலும் கருத்துக்களை அதிகம் அதிகம் வெளியிட வேண்டும். அதன் மூலம் இனவாதிகளின்
கருத்துக்களுக்கு அடிமையாகும் சாதாரன மக்களுக்கு உண்மையை புரிய வைக்கலாம்.
No comments:
Post a Comment