2012
இரண்டாயிரத்து பன்னிரெண்டு
SAFRAN
BIN SALEEM - AKURANA
2012 ஆம் ஆண்டு பிரிந்து செல்லும் இத்தருவாயில் இவ்வாண்டினை ஒரு முறை மீட்டிப்
பார்க்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இவ்வாறு மீட்டிப் பார்க்கும்
போது குறித்த சில ஆண்டுகள் , அதன் நினைவுகள் எம்மை விட்டு நீங்காது காலமெல்லாம்
எம்மனதில் இடம் பிடிக்கிறது. நினைவுகள் என்று சொல்லும் போது ஆரோக்கியமான சிறந்த
செயற்பாடுகளாகவோ அல்லது ஆரோக்கியமற்ற எம்மை பாதிக்கின்ற செயற்பாடுகளாகவோ
இருக்கலாம்.
அந்த வகையில் 1948, 1972, 2004, 2007 போன்ற ஆண்டுகள் இலங்கை வரலாற்றில்
முக்கிய இடம் பதித்து எம் உள்ளங்களிலில் நீங்கா இடம் பிடித்து விட்டது. அது போல்
1990 ஆம் ஆண்டு இலங்கை வாழ் முஸ்லிம்களால் மறக்க முடியாத பல சோகங்கள் படிந்த
ஆண்டாக காணப்படுகிறது. இந் நாட்டில் இராணுவத்திற்கும் LTTEக்கும் இடையிலான
யுத்தத்தின் போது முஸ்லிம்கள் நடுவில் சிக்கித் தவித்த சம்பவங்களை மறக்க முடியாது.
இக் காலகட்டத்தில் LTTE இனால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள்
ஏராளம். குறிப்பாக காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருக்கும் போது
மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், ஏறாவூரில் அரங்கேற்றப்பட்ட கொலைகள்
போன்றவற்றால் எமது உறவுகளை பறிகொடுத்தோம். அதே போல் வடக்கிலிருந்து முஸ்லிம்களை 24 மணி நேர காலக்கெடுவில் உடுத்த
உடையுடன் விரட்டியடித்த சம்பவங்களை கேட்கும் போது இப்போது கூட அழுகை வருகிறது.
அந்த 1990 ஆம் ஆண்டு எமது உள்ளங்களிலில் நீங்கா இடம் பிடித்து விட்டது.
2012 ஆம் ஆண்டை நாம் நோக்குகையில் இவ்வருட ஆரம்பத்திலிருந்து பௌத்த
இனவாதிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் முஸ்லிம்களை முஸ்லிம்களின் சொத்துக்களை,
உரிமைகளை, வணக்கஸ்தலங்களை தாக்கும் ,அழிக்கும் திட்டங்களை நாம் அறிவோம். சென்ற
ஆண்டுகளிலும் சில சம்பவங்கள் இவர்களால் அரங்கேற்றப்பட்ட போதும் அவை அவ்வப்போது
தீர்க்கப்பட்டது அல்லது மறக்கடிக்கப்பட்டது. ஆனால் 2012 ஆம் ஆண்டில் தம்புள்ளை ஜும்மா
பள்ளிவாயல் மீதான தாக்குதல் தொட்டு நாட்டின் பல பாகங்களிலும் பள்ளிவாயல்கள், முஸ்லிம்களின் வியாபாரஸ்தலங்கள் என்பன
தாக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் வர்தகத்தை தடுக்கும்
முயற்சிகளையும் நாட்டின் பல பாகங்களிலும் அரங்கேற்றி வருகின்றனர். இன்னும் பல
முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாது ஒழிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்படுகிறது. (இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சையின் போது ஒரு
பரீட்சை நிலையத்தில் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை கழட்டியமை, சில இடங்களில்
உழ்ஹிய்யா கொடுப்பதில் பிரச்சினைகளை உண்டு பண்ணியமை என்று கூறிக்கொண்டே செல்லலாம்)
ஒரு சிறு குழுவால் ஆரம்பிக்கப்பட்ட இனவாத நடவடிக்கை இன்று நாடு முழுவதும் பரவி
விட்டதா ! என எண்ணதே தோன்றுகின்றது. ஆனால் ஒரு விடயத்தை
ஞாபகத்தில் வைக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான சிங்கள சகோதரர்கள் எம்முடன் நல்ல
முறையில் நடந்து கொள்கிறார்கள். உதாரணமாக தம்புள்ளை ஜும்மா பள்ளிவாயல் மீதான
தாக்குதலின் போது அப் பள்ளிவாயலை சுற்றியுள்ள சிங்கள சகோதரர்கள் முஸ்லிம்களுக்கு
ஆதரவாக செயற்பட்டமையை குறிப்பிடலாம்.
முஸ்லிம்களின் மத விவகாரம், வர்தகம், உணவு முறைமை (பன்றி இறைச்சி விவகாரம் ), அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால்
பிரிவு போன்ற இன்னோரன்ன விடயங்களில் கைவைத்துள்ள இனவாதிகள் இதனை தொடர்ந்த வண்ணம்
உள்ளமை பயங்கர விளாவுகளை தோற்றுவிக்குமா? என்ற அச்சத்தை
தோற்றுவிக்கிறது.
ஆக ஒட்டு மொத்தமாக பாரக்கும் போது 2012 இலங்கை முஸ்லிம்களை பொறுத்த மட்டில் பல
சோதனைகளையும், அச்சத்துடனான வாழ்வையும் தந்து விட்டு செல்கின்றது என்பதை மறக்க
முடியாது. அந்த வகையில் பார்க்கும் போது 2012 ஆம் ஆண்டும் இலங்கை வாழ்
முஸ்லிம்களால் மறக்க முடியாத ஆண்டாகவே காணப்படுகிறது.
No comments:
Post a Comment