Pages

Tuesday, June 4, 2013

இலங்கை வாழ் ஒவ்வொருவரு முஸ்லிமினதும் கவனத்திற்கு................................!

இலங்கை வாழ் ஒவ்வொருவரு முஸ்லிமினதும் கவனத்திற்கு................................!

(சிட்டகொங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்திலிருந்து SAFRAN SALEEM – அக்குரணை)

எமது நாட்டில் முஸ்லிம்  சமுகத்துக்கு எதிராக பல சதித்திட்டங்கள் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனை நாம் அறிவோம். இவ் வேளையில் நாம் அரசியல் தலைமைகளுக்கும் மற்றும் மார்க்க தலைமைகளுக்கும் மட்டும் அச் சவால்களை பொறுப்புச் சாட்டாது நாம் ஒவ்வொருவரும் எம் முன்னுள்ள சவால்களுக்கு எம்மாலான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தலைமகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் இலங்கை வாழ் ஒவ்வொருவரு முஸ்லிம் மீதும் உள்ள சில பணிகள் வருமாறு
1.       நாம் அனைவரும் எம்மத்தியிலுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று பட வேண்டும்.
2.       ஒவ்வொருவரு முஸ்லிமும் ஆன்மீக ரீதியில் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம் சொல்லுகின்ற , காட்டித் தந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும். நம்பிக்கைகுரியவர்களாக , வாக்கு மீறாதவர்களாக திகழ வேண்டும்.
3.       எமது பிரச்சினைகளை அல்லாஹ்விடம் பாரம் சாட்டி அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும்.
4.       எம்மத்தியில் சிங்கள , ஆங்கில மொழி அறிவு , எழுத்தாற்றல் உள்ளவர்கள் இஸ்லாம் பற்றியும் , முஸ்லிம்கள் பற்றியும் , முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் தேசிய , சர்வதேச சிங்கள , ஆங்கில பத்திரிகைகளுக்கும் , சஞ்சிகைகளுக்கும் எழுத வேண்டும்.
5.       அந்நிய இன மக்களுடன் நல்ல முறையில் (நல்ல அஃலாக்குடன்) பழக வேண்டும். (பெரும்பான்மை இன மக்களில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர்.)
6.       இலங்கை மண் எங்களுக்கும் சொந்தமானது.எமது நாடு என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். (எம்மில் சிலர் இது சிங்களவர்களது நாடு என்ற எண்ணத்தில் உள்ளனர். அதை தவிர்த்து இது எனது தாய் நாடு என்பதை உணர வேண்டும்.) மேலும் இலங்கை நாட்டில் ஒரு சிங்களவர்க்கு உள்ள உரிமை ஒரு முஸ்லிமுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும்.
7.       பெரும்பான்மை இன நண்பர்களுடன் நல்ல முறையில் அன்பளிப்புகளை இஸ்லாமிய வரையறையினுள் பரிமாறி இன ஒற்றுமையை பேணல்.
8.       எம்மத்தியில் (ஊர் வாரியாக) சிறந்த ஆரோக்கியமான சிவில் சமூக அமைப்புக்களை உருவாக்குதல்.
9.       எம்மத்தியில் உள்ள தேசிய அமைப்புக்களை பலப்படுத்தல். அவ் அமைப்புக்கள் உயர் மட்ட ரீதியில் சவால்களை முறியடித்தல்.
10.   எமது அரசியல் தலைமைகள் ஓரணியில் நின்று செயற்பட வலியுறுத்தல்.
11.   எமது வணக்கஸ்தலங்களையும் , மத்ரஸாக்களையும் , கலாச்சாரத்தையும் , சின்னங்களையும் , உரிமைகளையும் , சொத்துக்களையும் பாதுகாக்க ஆரோக்கியமான திட்டங்களை வகுத்தல்.
12.   இன்னும் பல......................................................................................................................


அனைத்து முஸ்லிம்களும் எப்போதும் ஓரணியில் நின்று எம் முன்னுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

யா அல்லாஹ்..............................!
இலங்கை மற்றும் சர்வதேச முஸ்லிம்களையும் , மஸ்ஜித்களையும் , மத்ரஸாக்களையும் , இஸ்லாமிய சின்னங்களையும், உரிமைகளையும் , சொத்துக்களையும் பாதுகாத்தருள்வாய்க.
                                                                 ஆமீன்.

No comments:

Post a Comment